Wednesday, 14 September 2016

டிகிரி சுத்தமாக பாவக சக்கரத்தின் படி ஜாதகத்தை ஆராயும் முறை

டிகிரி சுத்தமாக பாவக சக்கரத்தின் படி ஜாதகத்தை ஆராயும் முறை
     இந்திய பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு பாவத்தின் அளவானது 30 பாகைகள் ஆகும். எனவே பன்னிரெண்டு பாவங்களும் Equal Houses System என்ற சித்தாந்தத்தின் படி 30 சம அளவு கொண்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வாக்கிய முறை படியும் ஒரு பாவமானது ஒன்பது நட்சத்திர பாதத்தை கொண்டுள்ளது. ஒரு ராசியின் அளவும் 30 பாகைகள் கொண்டதாக உள்ளது. முப்பது பாகைகள் கொண்ட ஒரு ராசியில் லக்கினம் என்ற முதல் பாவமானது குழந்தை பிறந்த நேரத்தின் படி ராசியின் ஆரம்ப பாகையிலும் அமையலாம், 12 பாகையிலும் அமையலாம், 17 பாகையிலும் அமையலாம் அல்லது 29 பாகையிலும் அமையலாம். எடுத்துக்காட்டாக லக்கினம் ரிஷப ராசியில் 22 வது பாகையில் அமைந்து புதன் கோளானது ரிஷப ராசியில் 16 வது பாகையிலிருந்தால் ராசி சக்கிரத்தில் லக்கினம் மற்றும் புதன் ரிசப ராசியில் இருப்பதாகதான் குறிப்பிடுவோம். ஆனால் புதன் கோளானது லக்கின பாகைக்கு குறைவாக இருப்பதால் லக்கினத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்ள கூடாது. புதன் கோளானது 12 ஆம் பாவத்தில் இருப்பதாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் பாவமானது மிதுன ராசியில் 22 வது பாகையில் ஆரம்பம் ஆகும். இதேபோல 12 பாவங்களும் அடுத்த அடுத்த ராசிகளில் 22 பாகையில் ஆரம்பம் ஆகும். அடுத்த அடுத்த இராசிகளில் இருபத்தி இரண்டு பாகைக்கு குறைவான பாகையில் உள்ள கோள்கள் எல்லாம் தான் நிற்கும் வீட்டிற்கு முந்தின வீட்டில் நிற்பதாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரண ஜாதகம் மற்றும் விளக்கம்:
Text Box: இராசி
25/06/1979
11:34 PM
சென்னை
      

 

மேலே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதகத்தில் லக்கின ஆரம்ப முனையானது 29 பாகை 51 கலை 47.34 விகலையில் ஆரம்பமாகிறது. ஒன்பது கோள்களும் லக்கின பாகைக்கு குறைவாக இருப்பதால் தான் நிற்கும் வீட்டிற்கு முந்தைய வீட்டில் அமையும். ஒவ்வொறு பாவத்திற்கும் அதற்கு முந்தய பாவம் விரய பாவமாக அமைந்து அந்த குறிப்பிட்ட பாவத்தைத் தடுக்கும். எனவே ஜோதிட பலன்களும் தவறுதலாக அமையும்.
தற்பொழுது இந்த ஜாதகிக்கு புதன் திசையில் சந்திர புக்தி நடப்பில் உள்ளது. இராசி சக்கிரத்தில் தாசா நாதன் புதன் திருமணத்தை தடுக்கும் களத்திர பாவத்திற்கு விரைய பாவமான 6 ஆம் பாவத்தில் நின்று இருப்பது போல தோன்றினாலும் பாவக சக்கரத்தில் களத்திர பாவத்திற்கு லாப பாவமான (11ஆம் பாவம்) ஐந்தாம் பாவத்தில் இருப்பது திருமணத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதே போல் புக்தி நாதன் சந்திரன் பாவக சக்கரத்தில் சுகஸ்தானமான 4 ஆம் பாவத்தில் அமைந்துள்ளதும் திருமணத்திற்கு சாதக அமைப்பாக அமைந்துள்ளது.
     பாவக சக்கரத்தில் 6 ஆம் பாவத்தில் லக்னாதிபதி மற்றும் லக்கின சுபரான சனி நிற்பது உயிர் காரகத்தை கெடுக்காது. 6 ஆம் பாவ பொருள் காரகமான கடனை ஜாதகிக்கு ஏற்படுத்தும். 6 ஆம் பாவமானது உப ஜெய ஸ்தானமாக இருப்பதால் அசுப கோளான ராகு நிற்பது ஜெயத்தை கொடுக்கும்.
குறிப்பு:
     கோள்கள் ராசியில் அடையும் பலமான ஆட்சி, மூலத்திரிகோணம், உச்சம், நட்பு, சமம், பகை மற்றும் நீசத்தை ராசி சக்கிரத்தை வைத்து தான் அறிய வேண்டுமே தவிர பாவக சக்கிரத்தை வைத்து பார்க்க கூடாது. இதே போல் கோள்களின் சேர்க்கைகளினால் ஏற்படும் யோகங்களையும், கோள்களின் பார்வைகளையும் இராசி சக்கரத்தில் தான் பார்க்க வேண்டுமே தவிர பாவக சக்கரத்தில் பார்க்க கூடாது.